ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இரு வரிக்கவிதைகள்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

இரு வரிக்கவிதைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 12:37 am





என்னோடு பேசும்
ஜன்னல் வழி நிலவே...
அவளோடும் பேசுவாயா...?



நெடுநேரமாய் பேசும் நண்பன்
போகும்போது கேட்பானோ...
கடன்.



வந்துவிடாதே... மழையே
பசியுடனே
சாலை ஓவியன்.



இரங்கல் ஊர்வலம்
கதறியபடி...
கடன் கொடுத்தவன் மனசு.



'குழந்தைத் தொழிலாளி ஒழிப்பு...'
போஸ்டர் ஒட்டும்
பிஞ்சுக் கைகள்.



காது குத்தியதிலிருந்து அழுகிறாள்
இன்னும் ஏழைச்சிறுமி
கம்மல் கேட்டு.



ஆலைச்சங்கு அலறுகிறது
இல்லை... இல்லை
ஏப்பமிடுகிறார் முதலாளி.



ஊரெங்கும்
இலவச தண்ணீர்ப்பந்தல்
சிறுநீர் கழிக்க 50 பைசா.



நேரம் சரியில்லை
நஷ்டத்தில் ஓடுகிறது
கடிகாரக் கடை.



சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by amloo on Sun Jul 05, 2009 12:39 am

உங்க சொந்த கவிதையா???

சரி அண்ணா நான் கிளம்புகிறேன்...நாளை வேலை...

take care..gd nite..swt dream...bye frenzz...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by Guest on Sun Jul 05, 2009 12:39 am

கவிதை சூப்பர் ஆனால் இதை கோப்பி அடிச்சு எழுத எனக்கு காதலி இல்லை

Guest
Guest


Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 12:42 am



தேன் தேடுதோ...
வண்டு
மலர் வளையத்தினுள்.



சூரபத்மனை வென்ற மகிழ்வில்
ஊர்வலம் வந்தார் முருகன்
எந்திர துப்பாக்கி காவலோடு.



நிலவில் வீடுள்ளவர்
பூமியில் வீசட்டும்...
அணுகுண்டு



என்னிடம் பேசாமல்
குருவியிடம் பேச்சு
நான் நட்ட மரம்.



பெய்துவிட்ட மழையோடு
இன்னுமென்ன வாதம்..?
தவளையின் சத்தம்!



பசித்தழுகிறது குழந்தை.
ரப்பர் மரத்தில் பால் வெட்டியபடி
வற்றிய மார்போடு அம்மா.



நெய்திட்ட நூலைவிட
கைத்திட்ட நூல் அதிகம்
ஏழையின் உடை.



நடுங்கும் குளிரில்
பயன்படாத போர்வையோடு
'கம்பளி'ப்பூச்சி.



யாருக்காகக் குப்பை மேட்டில்
குடையோடு காத்திருக்கிறது..?
காளான்!



முழுசாய் கரைந்துவிடுவேனோ...?
சந்தேகத்துடன்
விநாயகர்.



நெருப்பு மட்டுமல்ல
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலித்துப்பார்!



கதர் கண்காட்சி
துவக்கி வைத்தார் அமைச்சர்
'ஜீன்ஸ்' உடையில்!



சரளமாக ஆங்கிலம் பேச...
தொடர்ந்து பாருங்கள்
தமிழ் நிகழ்ச்சிகள் டி.வி.யில்.






சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 12:44 am

சொந்தக் கவிதையல்ல...
எழுதியது யாரென்றும் தெரியவில்லை..

Geocities தளம் விரைவில் மூடப்பட இருக்கிறது..
2003 முதல் என் இலவச இணையதளம் செயல்பட்டு வந்தது..
அவைகளை இங்கு மற்றிக்கொண்டு இருக்கிறேன்.

http://www.geocities.com/sivakumarsubburaman

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 12:45 am

நன்றி சென்றுவாருங்கள் அம்லூ!!!

ஈகரை இணையத்தின்
இனிய இரவு வணக்கங்கள்
....

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by Manik on Sun Jul 05, 2009 10:55 pm

கவிதை அனைத்தும் அருமை
அதில் உள்ள தகவல் அனைத்தும் அருமை
இந்த தகவலை கொடுத்த சிவா சார் அருமை
சிவா சார் கொடுத்த இந்த ஈகரை அருமையோ அருமை..........

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by sudhakaran on Mon Jul 06, 2009 12:24 am

அருமையான கவிதைகள்

sudhakaran
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 432
வசிப்பிடம்: கானு, நைஜீரியா
சேர்ந்தது: 06/03/2009

Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by சிவா on Mon Jul 06, 2009 5:41 am

manekan2000 wrote:கவிதை அனைத்தும் அருமை
அதில் உள்ள தகவல் அனைத்தும் அருமை
இந்த தகவலை கொடுத்த சிவா சார் அருமை
சிவா சார் கொடுத்த இந்த ஈகரை அருமையோ அருமை..........


சிறு திருத்தம்... சிவாவின் பணி ஈகரை ஆரம்பித்ததுதான், ஆனால் அதன் வளர்ச்சியில் உங்கள் அனைவரின் பங்கும் உள்ளது என்பது தான் உண்மை. மேலும் உங்களின் ஆதரவு ஈகரை இணையத்துக்கு என்றும் தேவை.


சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: இரு வரிக்கவிதைகள்

Post by Guest on Mon Jul 06, 2009 10:15 am

படிக்க படிக்க திகட்டாத கவிதைகள் Like a Star @ heaven

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum