ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» திரு கான் அவர்களுக்கு நன்றி...!
by மீனு Today at 2:03 pm

» செத்துப்போ!
by மீனு Today at 2:01 pm

» என் விழி
by rifas Today at 2:01 pm

» கணக்குப் புலிகளுக்கு நச்சுன்னு ஒரு புதிர்!
by rifas Today at 2:00 pm

» ஈகரை நண்பர்கள்ளுக்கு காலை வணக்கம்.
by மீனு Today at 1:58 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by மீனு Today at 1:56 pm

» ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி?
by மீனு Today at 1:55 pm

» மீனுவின் இசை இளவரசனுக்காக
by rifas Today at 1:49 pm

» திருமண வாழ்த்து அட்டை [ PSD Template ]
by இளவரசன் Today at 1:35 pm

» இளவரசன்னா உங்களிடம்????????
by இளவரசன் Today at 1:16 pm

» அவள் தான் அம்மா
by rifas Today at 1:07 pm

» வாங்க விரதம் இருக்கலாம்
by paarthaa077 Today at 12:59 pm

» தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
by இளவரசன் Today at 12:55 pm

» அம்மா
by rifas Today at 12:55 pm

» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
by சுடர் வீ Today at 12:45 pm

» என் காதலின் ஏக்கம் !!!!!
by rifas Today at 12:45 pm

» என்னவள் A to Z வரை
by VIJAY Today at 12:38 pm

» ஷவ‌ரி‌ல் பரவு‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள்
by VIJAY Today at 12:38 pm

» ஈகரை கண்ணோட்டத்தில்,உங்களுக்கு பயனுள்ள சில தகவலை சொல்ல
by nirshan2007 Today at 12:34 pm

» Premium accounts for Best downloads sites.
by இளவரசன் Today at 12:30 pm

» any one help me
by இளவரசன் Today at 12:28 pm

» பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்
by paarthaa077 Today at 12:12 pm

» உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்
by nirshan2007 Today at 12:12 pm

» உடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )
by இளவரசன் Today at 12:08 pm

» சத்துமாவு & சத்துபானம்
by nirshan2007 Today at 12:07 pm

» ஸ்டெயிலு........ ஸ்டெயிலு !
by nirshan2007 Today at 12:03 pm

» உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
by nirshan2007 Today at 11:43 am

» இளநரைக்கு சிறந்த மருத்துவம்
by யாழவன் Today at 10:31 am

» மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்
by kavinele Today at 10:23 am

» புலி வருது
by யாழவன் Today at 10:07 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

முற்பிறவி மனோவியாதியும், சிறப்பு ஹிப்னாடிச சிகிச்சையும்

View previous topic View next topic Go down

முற்பிறவி மனோவியாதியும், சிறப்பு ஹிப்னாடிச சிகிச்சையும்

Post by மீனு on Thu Nov 05, 2009 4:23 am

மனோவியாதி என்பது பல்வேறு தருணங்க்ளில், பல காரணங்களினால் ஏற்படுகிறது. மனோவியாதியைப் பொருத்தவரை குணப்படுத்துவதற்கு மருந்து, மாத்திரையை விடவும் கவுன்சலிங் எனப்படும் நோயாளியுடன் அமர்ந்து பேசி அவர்களின் ஆழ்மனதில் என்ன சிந்தனை ஓட்டம் உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதே சிறந்ததாகும்.

அதுபோன்றதொரு சிகிச்சையே ஹிப்னாடிக் சிகிச்சை. இந்த சிகிச்சையுடன் தொடர்புடையது முற்பிறவி மருத்துவ சிகிச்சை எனலாம்.

முற்பிறவி மருத்துவ சிகிச்சை (Past Life Therapy) என்ற தலைப்பில் உளவியல் ஆராய்ச்சிகள் ரஷ்யாவிலும், ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.




ஹிப்னோதெரபி சிகிச்சை முறையில், மனவியாதிகள் மருந்தின்றி குணமாக்கப்படுகின்றன. இதனால் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் (side effects) தவிர்க்கப்படுகின்றன.

முற்பிறவியில் நிறைவேறாத நம் ஆசைகள், விட்டுப் பிரிந்து போன காதல் உறவுகள் இப்பிறவியில் நிறைவேறுவதாக அமெரிக்க மனநல மருத்துவர் டாக்டர் பிரெய்ன் கூறுகிறார்.

நாம் முற்பிறவியில் பாதியில் விட்டுப்போன கடமைகளை அறிந்து செயலாற்றவும், இந்த சிகிச்சை உதவுகிறது.

முற்பிறவிகளில் கற்ற கலைகள், கல்வியறிவும் கூட இப்பிறவியில் நம் ஆழ்மனதில் பதிந்துள்ளன. அதை அறிந்து செயல்படுவதால்தான் சிறிய வயதில் கூட பலரால் பெரிய சாதனைகளை புரிய முடிகிறது. அதற்கு இந்த ஹிப்னாடிக் சிகிச்சை உதவுகிறது.

செல் நினைவுத் திறன் (Cellular Memory):

நமது உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் ஆழ்மனதில் பதிந்துள்ள கடந்த கால நினைவுகள் நிறைந்துள்ளன. முந்தைய பிறவியில் நாம் அனுபவித்த இன்ப, துன்பங்கள், உடலில் ஏற்பட்ட வலிகள்-வேதனைகள் அனைத்துமே செல்களில் நிறைந்துள்ளன. அவற்றிற்கு ஏற்றபடிதான் நம் உடலும், உள்ளமும் இயங்குகிறது.

கடந்த கால நினைவலைகள் செல்களில் நீக்கமற நிறைந்திருப்பதால், நமது வாழ்வு பாதிக்க நேரிடுகிறது.

Past Life Theraphy - எனப்படும் மனநல மருத்துவ முறையில் இந்த மனபாதிப்புகளை கண்டறிந்து நீக்கி விட்டால், மனதும் உடலும் எந்த மருந்தும் இல்லாமல் பக்கவிளைவுகளின்றி நிரந்தர குணம் அடைய ஏதுவாகிறது.

மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருந்தால், எத்தனையோ உண்மைகள் புரிகின்றன. ஆனால் மனக்குழப்பத்தின் போது ஆறாவது அறிவு செயல்படுவதில்லை. ஆழ்மனதுடன் தொடர்புடைய பிரச்சினை என்பதால், எந்த மருந்தும் குணப்படுத்துவதில்லை.

ஆழ்மனதை ஊடுருவிப் பார்த்து மன பாதிப்புக்கான காரணத்தை அறிந்து, அதற்குரிய சிகிச்சையை அளித்தால், எந்தவித நாட்பட்ட மன வியாதியும் குணமாகி விடுகிறது. இந்த அரிய சிகிச்சை முறைதான் ஹிப்னோதெரபி.
முற்பிறவி பயங்களை குணப்படுத்தும் முறைக்கு Past Life Therapy என்று பெயர்.

ஒரு மனிதன் இறந்து விட்டாலும், அவனது ஆத்மா மறுபிறவி எடுக்கிறது. அந்த ஆத்மாவில் அல்லது மனதில் பதிந்துள்ள நினைவுகளும், உணர்வுகளும் அழிந்து விடுவதில்லை. தொடர்ந்து அடுத்த பிறவியிலும் ஆழ்மனதில் வியாபித்து இருப்பது பல ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

உதாரணமாக முற்பிறவியில் நெருப்பில் எரிந்து உயிரிழந்தவருக்கு, இந்த பிறவியில் விளக்கின் தீ கூட பயத்தை ஏற்படுத்தலாம்.

சிலர் தண்ணீரைக் கண்டு அஞ்சுவர். வேறு சிலர் தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். இதுபோன்ற மனோவியாதிகளுக்கு ஹிப்னோதெரபி முறை அவசியமாகிறது.

எனவே ஆழ்மன ரணங்கள் (Subconcious wounds) நிச்சயம் அகற்றப்பட வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும்.

மீனாட்சி என்ற இளம் பெண் முந்தைய பிறவியில் சாலை விபத்தில் இறந்து போனதாகவும், அந்த நினைவுகளால் தான் மன நோயாளியாக 15 ஆண்டுகள் வரை இருந்ததாகவும் தெரிய வந்தது. ஹிப்னாடிச முறைப்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.

ஹிப்னாடிச சிகிச்சை மட்டுமல்லாது Para Psychotherapy எனும் மனோசக்தி மருத்துவமும் பேருதவியாக உள்ளது. இந்த சிகிச்சை மூலம் முற்பிறவி மனோவியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது.

முற்பிறவி மருத்துவம் குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர்,

www.prebirth.com
www.healyourpastlives.com
www.pastlifetherapy.com
www.pastliferegression.com
www.pastlifephobias.com போன்ற இணையதளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

Past life therapy முறையில் குணமாகும் நோய்கள்:

காரணமற்ற மனச்சோர்வு / விரக்தி (Panic Depression).

சிறு வயது முதலே இனம்தெரியாத பயங்களுடன் வாழ்வது.

தனக்குள் ஒரு தீயசக்தி புகுந்து ஆட்டுவிப்பதாக கூறுதல்.

கட்டுக்கடங்காத வெறித்தனம் / பழிவாங்கும் உணர்வு.

வாழ்வில் வெறுப்பு, சலிப்பு, அதிகமான பதட்டம்.

முறையற்ற பாலியல் உறவுகள்.

தாங்கமுடியாத, வெளியே சொல்லமுடியாத மன உளைச்சல்கள்.

நாட்கணக்காக சாப்பிடாமல், தூங்காமல் இருத்தல்.

ஒருவரே இருவித / பலவித மனப்பான்மையுடன் செயல்படுதல் (Multiple personality).

வேண்டாத அருவருப்பான நினைவுகள் தொடர்ந்து வந்து வாட்டுதல் (Obsession).

எப்போதும் தற்கொலை முயற்சி.

கடவுள் அல்லது தேவதை தன்னுடன் மட்டும் பேசுவதாகக் கூறுதல்.

குணப்படுத்த முடியாத மன / உடல் நோய்கள்.

சுயநினைவு/மனக்கட்டுப்பாட்டை இழந்து எங்கோ கற்பனையில் எப்போதும் சஞ்சரித்தல்.

கணவன்/மனைவி மேல் காரணமற்ற வெறுப்பு - வீட்டை விட்டு ஓடிப் போகுதல்.

மருந்தால் தீர்க்க முடியாத மனக்கோளாறுகள்.

நாம் காலங்காலமாக சுமந்து வரும் கடந்த கால எதிர்மறையான எண்ணங்களை (Past Life Negative Baggages) ஆழ்மனதில் இருந்து நீக்கி விட்டால், இன்றைய வாழ்வில் அமைதியையும், முன்னேற்றத்தையும் காண முடியும் என்பதில் ஐயமில்லை.

தவிர இப்பிறவியில் நாம் செய்யும் நன்மைகள் கடந்த பிறவிகளின் பாவச் சுமைகளை குறைக்கின்றன. இங்கே ஆன்மிகமும், அறிவியலும் சங்கமமாகின்றன. எனவே அறிவியலும், ஆன்மிகமும் ஒன்று என்பது புலனாகிறது.

தொடர்புக்கு:

டாக்டர் வேதமாலிகா,
மனோதத்துவ சிகிச்சை நிலையம்
மாங்காடு, சென்னை.
செல்பேசி: 9841780166
மின்னஞ்சல்: maduvanthii@yahoo.com

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11801
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum