ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க
by youngkings Today at 4:48 pm

» நாம் யார்?
by sham Today at 4:41 pm

» Breathtaking Images From National Geographic
by sham Today at 4:37 pm

» சில விரிவாக்கங்கள்
by Kraja29 Today at 4:37 pm

» இனிய காலை வணக்கம் நண்பர்களே
by வை.பாலாஜி Today at 4:36 pm

» Google OS Demo
by கோவைசிவா Today at 4:13 pm

» கவர்ச்சிக் கன்னியான கமல் மகள்:
by Kraja29 Today at 4:12 pm

» விடை சொல்லுங்கள்
by VIJAY Today at 3:38 pm

» உணர்வுகள்!!!
by M.C.Krishnan Today at 3:22 pm

» நட்புக் கவிதை!!!!!!
by Tamilzhan Today at 3:14 pm

» உடல்பயிற்சி செய்ய சிறந்த வழி
by nirshan2007 Today at 2:54 pm

» பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு
by Kraja29 Today at 2:47 pm

» Wonderful Indian Temples in abroad
by Kraja29 Today at 2:43 pm

» செத்தது நானா ,அவனா
by Kraja29 Today at 2:42 pm

» கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர்
by Kraja29 Today at 2:37 pm

» இது தான் கூகுள்
by Kraja29 Today at 2:24 pm

» ஆப்பிரிக்க வன விலங்குகள்...
by Kraja29 Today at 2:20 pm

» அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை?
by Kraja29 Today at 2:19 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by nirshan2007 Today at 2:11 pm

» இளநீர் இளநீர்
by nirshan2007 Today at 1:58 pm

» இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
by nirshan2007 Today at 1:39 pm

» ஆயுளுக்கு அஸ்திவாரம்
by mathans Today at 1:30 pm

» அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
by nirshan2007 Today at 1:28 pm

» மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
by nirshan2007 Today at 1:24 pm

» poemsssssssss
by mathans Today at 1:23 pm

» இளவரசன் மீனு பேசிக் கொள்கிறார்கள் ,
by வை.பாலாஜி Today at 1:22 pm

» எதை விட்டுக் கொடுப்பது?
by velwish Today at 12:50 pm

» சுவாமிய சரணம் ஐயப்பா
by srinivasan Today at 12:49 pm

» ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?
by srinivasan Today at 12:49 pm

» வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள்
by தாமு Today at 12:28 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

Post by balakarthik on Sat Nov 07, 2009 7:13 pm

தோழர்களே நதி நீர் இணைப்புப்பற்றி டாக்டர் அப்துல் கலாம் கூறுவதை கேளுங்கள்

நதிநீர்இணைப்பு’’ பற்றிய பேச்சு நம் நாட்டில் அடிக்கடி எழுகிறது. அது சாத்தியம் என்றும் சாத்தியமில்லை என்றும், நாட்டின் பல பிரச்னை களுக்கு அது தீர்வாக இருக்கும் என்றும் இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது கெடுக்கும் என்றும் இரண்டு விதமான கருத்துகள் அவை. எந்த ஒரு திட்டத்துக்குமே இரண்டு வகையான கருத்துக்கள் இருக்கவே செய்யும்.

அதுவும் இந்தியாவைப் போன்ற மிகப்பெரும் ஜன நாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோது வதில் ஆச்சர்யமில்லை. அவற்றையெல்லாம் நமது சுய விமர்சனங்களாகவே எடுத்துக் கொண்டு விவாதம் செய்து பார்த்தால்தான் உண்மை எது என்பது விளங்கும். "நாடு முழுவடும் உள்ள நதிகளை இணைப்பது என்பது சாத்தியமே இல்லை.. அது ஒரு மிகப்பெரிய சவால்...'’என்கிறார்கள் சிலர்.

நான் சொல்வது, இப்படி சாத்தியமே இல்லை என்று பேசுவதை முதலில் விட்டு விடுவோம் என்பதுதான். நதி நீர் இணைப்பு ஏன் சாத்தியமில்லை? மனிதனால் முடியாதது என்று ஒன்று உண்டா? வரலாற்றில் அவன் புரிந்திருக்கும் சாதனைகள் எல்லாம் ஒன்றா, இரண்டா?

கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை பிறந்திருக்காது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.

சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியை அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று சந்திரனுக்கு செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

7 முறை அமெரிக்காவால் சந்திரனை சுற்றி வர இயலவில்லை, சீனாவாலும், ஜப்பானாலும் சந்திரனில் சாதிக்க முடியாததை இந்தியாவின் கன்னி முயற்சியிலேயே நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். அயர்லாந்தில், சுவிட்ச்சர்லாந்தில், நெதர்லாந்தில் அமெரிக்காவில் (பனாமா கால்வாய்), ஆப்பிரிக் காவில் (நைல் நதிகளை) இணைத்து சாதித்து காட்டியிருக் கிறார்கள். இப்படி பல்வேறு நாடுகளில், அதன் தலைவர்கள், இயற்கையை மாற்றி, நதிகளை இணைத்து நாட்டை வளமாக்கி காட்டி இருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன் இந்தியாவிலே அதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. உத்திரபிரதேசம், கோவா, ஆந்திரா, கேரளாவிலே நதிகள் இணைக்கப்பட்டி ருக்கிறது. இந்தியாதான் இயற்கை வளத்திலும் சுற்றுப்புற சூழல் வளத்திலும் சிறந்த நாடு. தண்ணீரே இல்லாத பாலைவனத்தை சோலைவனமாக துபாய், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் மாற் றிக்காண்பிக்கவில்லையா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்ற பாடல் வரிகள் முடியும் என்பதைத்தானே உணர்த்துகின்றன?

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிக மாக உள்ளது. இப்பொழுது சில இளைஞர்களையும் அது தொற்றிக்கொண்டு விட்டது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.

எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவம் கொண்டோரின் துணை கொண்டு வெற்றியை காண முடியும். நதிகளை இணைக்க என்ன வேண்டும். தைரியமும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.

தைரியம் என்று சொன்னேனே, எப்படிப்பட்ட தைரியம் வேண்டும்?

இமயமலையையே புரட்டிப் போடுகிற தைரியம்.

புதுமையாக சிந்திக்கக் கூடிய தைரியம்!

படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய தைரியம்!

கண்டு பிடிக்கப்படாத பாதைகளை உருவாக்கி அதில் நடந்து சாதித்துக்காட்டக்கூடிய தைரியம்.

புதிய பாதைகளில் பயணித்து புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய தைரியம்!

இளைஞர்களுக்கு அந்த தைரியம் உண்டு. எந்தப் பிரச்னைகளையும் தைரியமாக எதிர் கொண்டு, பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் அவற்றைத் தவிடு பொடி ஆக்கும் தைரியம் அவர்களிடம் உண்டு!

இப்படிப்பட்ட இளைய சமுதாயம் ஒன்றுபட்டு எழுந்தால் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தான் !

சீனாவில் அதன் நடுப்பகுதியிலிருந்து, திபெத் வரை பனிநிலத்தில் உலகிலேயே உயரமான ரயில் பாதையை அமைத் திருக்கிறார்கள். மலைக்க வைக்கும் உழைப்பு அது. அது சாத்தியம் என்றால் நதி நீர் இணைப்பும் சாத்தி யம்தான்.

ஏற்கனவே, உலக வெப்பமயமாதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால் பருவ மழையே பொய்த்து வருகிறது. 2020-ம் வருட அளவில், நாளுக்குநாள் கிடுகிடுவென்று உயர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத் தால், 400 மில்லியன் டன் உணவுப் பொருட் களை நாம் அதிகமாக உற்பத்தி செய்தாக வேண்டும். அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்!

அதற்கெல்லாம் ஒரே தீர்வு நதிநீர் இணைப்புதான்! அது காலத்தின் கட்டாயம்! நனவாகக் கூடிய கனவு!

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Re: முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 8:00 pm

balakarthik wrote:நதிகளை இணைக்க என்ன வேண்டும். தைரியமும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.

தைரியம் என்று சொன்னேனே, எப்படிப்பட்ட தைரியம் வேண்டும்.

இமயமலையையே புரட்டிப் போடுகிற தைரியம்.

புதுமையாக சிந்திக்கக் கூடிய தைரியம்!

படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய தைரியம்!

கண்டு பிடிக்கப்படாத பாதைகளை உருவாக்கி அதில் நடந்து சாதித்துக்காட்டக்கூடிய தைரியம்.

புதிய பாதைகளில் பயணித்து புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய தைரியம்!

இளைஞர்களுக்கு அந்த தைரியம் உண்டு. எந்தப் பிரச்னைகளையும் தைரியமாக எதிர் கொண்டு, பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் அவற்றைத் தவிடு பொடி ஆக்கும் தைரியம் அவர்களிடம் உண்டு!

இப்படிப்பட்ட இளைய சமுதாயம் ஒன்றுபட்டு எழுந்தால் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தான்!


முடியுமென நம்பி எடுக்கும் எந்த செயலும் முடியாத கதை கேளோம். முடித்து சாதித்த வராற்றில் நம் பெயரையும் பதிப்போம்...

நதியை நிச்சயம் இணைக்க முடியும்..

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

Post by balakarthik on Sat Nov 07, 2009 8:02 pm

rabbit silent

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Re: முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

Post by aarul on Sat Nov 07, 2009 8:26 pm


aarul
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 539
வசிப்பிடம்: erode,tamilnadu. manielectronics
சேர்ந்தது: 02/10/2009

Back to top Go down

Re: முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

Post by Kraja29 on Sat Nov 07, 2009 8:50 pm


Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4102
வசிப்பிடம்: QATAR
சேர்ந்தது: 07/04/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum